தம்பதிகளிடையே ஈடுபாடு அதிகரிக்கும்... இன்றைய ராசிபலன்: 12.02.2026

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
தம்பதிகளிடையே ஈடுபாடு அதிகரிக்கும்... இன்றைய ராசிபலன்: 12.02.2026
Published on

இன்றைய பஞ்சாங்கம்:-

பிப்ரவரி 12

கிழமை: வியாழக்கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: தை

நாள்: 29

ஆங்கில தேதி: 12

மாதம்: பிப்ரவரி

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று பிற்பகல் 02-40 வரை கேட்டை பின்பு மூலம்

திதி: இன்று பிற்பகல் 1-20 வரை தசமி பின்பு ஏகாதசி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 10.30 - 11.30

நல்ல நேரம் மாலை: 12.30 - 01.30

ராகு காலம் பிற்பகல்: 1.30 - 3.00

எமகண்டம் காலை: 6.00 - 07.30

குளிகை காலை: 09.00 - 10.30

கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 07.30

சூலம்: தெற்கு

சந்திராஷ்டமம்: பரணி, கிருத்திகை

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

இன்று மனக்குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும். காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

ரிஷபம்

சமநிலை மற்றும் சமரசம் உங்களுக்கு வெற்றியை தரும். குடும்பத்தில் இனிய சூழல் நிலவும். தொழிலில் கூட்டாண்மை முயற்சிகள் பலனளிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வரும். பணவரவு சீராக இருக்கும். அழகு, கலை சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மிதுனம்

நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வுக்கான சாதகமான காலமாக இருக்கிறது. தொழிலில் முன்னேற்றம் கூடும். மார்கெட்டிங்பிரிவினர்களுக்க ஆர்டர்கள் அலைச்சலின் பேரில் கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். மனதில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

கடகம்

உங்கள் ஆழமான சிந்தனை சரியான முடிவுகளை எடுக்க உதவும். பயணம் சாதகமாக அமையும். குடும்பத்தில் இருந்த மறைமுகமான பிரச்சனைகள் தீரும். தொழிலில் ரகசிய முயற்சிகள் வெற்றி தரும். பணவரவு எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். தேகம் பொலிவாகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

சிம்மம்

உங்கள் உள்ளுணர்வு வழிகாட்டியாக இருக்கும். உறவுகளில் நம்பிக்கை வலுப்படும். தொழிலில் வெளிநாடு அல்லது தூர இட தொடர்புகள் சாதகமாக அமையும். ஆன்மீகப்பயணம் ஒரு சிலர் மேற்கொள்வர். தம்பதிகளிடையே ஈடுபாடு அதிகரிக்கும். உடல்நலத்தில் சிறு கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மெருன்

கன்னி

புதிய அனுபவங்கள் கிடைக்கும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சியான மாற்றங்கள் நிகழும். பணவரவு நல்ல நிலையில் இருக்கும். கல்வி, பயிற்சி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் காணலாம். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

துலாம்

தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய திட்டம் பலிக்கும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். நல்ல வரண் கிட்டும். சுபகாரிய பேச்சுவார்த்தை இனிதே நிறைவேறும். உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் ஒத்துழைப்பர். எதிர்காலம் குறித்து நல்ல நம்பிக்கை உண்டாகும். உடல்நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

விருச்சிகம்

தம்பதிகளிடையே சிறுசிறு சலசலப்புகள் வந்தாலும் பிரிய மாட்டீர்கள். பணவரவு சீராக இருக்கும். தேவையற்ற கவலைகளை விட்டுவிடுவது நல்லது. நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். உடல்நலத்தில் ஓய்வு அவசியம். தியானம் மன அமைதியை தரும். இன்று ரொம்ப நாளாக சந்திக்க நினைத்தவரை சந்திப்பீர்கள். மொத்தத்தில் மனதுக்கு இனிய நாளாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

தனுசு

தொழிலில் நிலைத்த முன்னேற்றம் காணலாம். உத்யோகஸ்தர்களுக்கு பணவரவு மெதுவாக உயரத் தொடங்கும். சேமிப்பு மீது கவனம் செலுத்துவது நல்லது. மொத்தத்தில் முயற்சிக்கு பலன் கிடைக்கும் நாளாக அமையும். பொறுமை இன்று முக்கியம். குடும்பத்தலைவிகளின் தேவை பூர்த்தியாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

மகரம்

இன்று புதிய யோசனைகள் வெற்றியை தரும் நாள். குடும்பத்தில் சுதந்திரமான சூழல் நிலவும். தொழிலில் புதுமையானவைகளை புகுத்தி விற்பனையை அதிகரிப்பீர்கள். பிரிந்த நண்பர்கள் இணைவதர்கான முயற்சிகள் பலனளிக்கும். பணவரவு எதிர்பாராத வகையில் கூடும். சமூக வட்டாரம் விரிவடையும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கும்பம்

இன்று உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை குறைவாகும். ஒரு சிலர் நீண்ட தூர பயணம் மேற்கொள்வார்கள். காதல் கண்சிமிட்டும். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் அதிகரிக்கும். இன்று உங்கள் தனித்துவம் வெளிப்படும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

மீனம்

இன்று மற்றவர்களின் மீது தங்கள் கருணை அதிகரிக்கும். தங்கள் மனைவியை புரிந்து கொண்டு மீண்டும் இணைவீர்கள். பெரியவர்களின் ஆலோசனை உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழிலில் உங்கள் ஆற்றல் வெளிப்படும். தேகம் ஆரோக்கியமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com