வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்... இன்றைய ராசிபலன் - 08.02.2026

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்... இன்றைய ராசிபலன் - 08.02.2026

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்
Published on

இன்றைய பஞ்சாங்கம்:-

பிப்ரவரி 8

கிழமை: ஞாயிறு

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: தை

நாள்: 25

ஆங்கில தேதி: 8

மாதம்: பிப்ரவரி

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று அதிகாலை 04-53 வரை சித்திரை பின்பு சுவாதி

திதி: இன்று காலை 5-13 வரை சஷ்டி பின்பு சப்தமி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம் காலை : 07.30 - 08.30

நல்ல நேரம் மாலை : 03.30 - 04.30

ராகு காலம் மாலை : 04.30 - 06.00

எமகண்டம் காலை : 12.00 - 01.30

குளிகை காலை : 03.00 - 04.30

கவுரி நல்ல நேரம் : காலை 01.30 - 02.30

கவுரி நல்ல நேரம் : மாலை 01.30 - 02.30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

மர வியாபாரம் அதாவது மரத்தால் ஆன பொருட்களின் வியாபாரம் வருவாயை அதிகரிக்கும். காதல் இனிக்கும். கணினி துறையில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு வரும். பண வரவில் குறைவில்லை. தம்பதிகளிடையே மகிழ்ச்சி பொங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

ரிஷபம்

வாகன பராமரிப்பு செலவு சற்று அதிகமாகும். கவனமுடன் வாகனத்தை பயன்படுத்துவது நல்லது. புதிய நண்பர்கள் அறிமுகமாவர். மாமியார், நாத்தனார் உறவு நன்றாக இருக்கும். சிறு வியாபாரிகளுக்கு விற்பனை மிகும். பெண்கள் வீட்டுச்செலவினை சமாளிப்பர். வெளியூர் பயணம் வெற்றி தரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மிதுனம்

பூர்வீக சொத்தில் தங்கள் பங்கு கிடைக்கும். வழக்குகளை இழுத்தடிக்கும். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். காதலர்களிடையே ஊடல் விலகும். குடும்பத்திற்காக தம்பதிகள் இணைந்து செயல்படுவர். உடல் நலம் தேறும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கடகம்

அழகு நிலையங்கள் ஆரம்பிக்க திட்டமிடுவீர்கள். தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் தங்கள் சொல்படி நடப்பர்.

பிள்ளைகளின் செயல்களில் கவனம் தேவை. கணினி துறையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். பெண்கள் ஆலய வழிபாடுகளில் ஈடுபடுவர். உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

சிம்மம்

உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். இருப்பினும் வேலையை குறித்த நேரத்தில் முடித்துக் காட்டுவீர்கள். மார்கெட்டிங் பிரிவினர் அதிக ஆர்டர்கள் பெறுவர். கணவனிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. உடல் நலம் தேறும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கன்னி

நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை நம்புங்கள். பணவரவு சீராகச் செல்லும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடி படிப்பில் ஆர்வம் கூடும். பற்று வரவு வசூலாகும். உடல் நலனில் கவனம் வேண்டும். வெளி உணவுகளை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

துலாம்

பிள்ளைகள் தங்கள் சொல்படி நடப்பர். வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். இரவில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். கல்யாணம், கிரகப் பிரவேசத்தில் கலந்து கொண்டு முதல் மரியாதையைப் பெறுவீர்கள். வரவேண்டிய பணம் இன்று வசூலாகும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

விருச்சிகம்

உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும் பாராட்டும் சலுகைகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். தம்பதிகளின் அன்யோன்யம் பெருகும். நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பெண்களுக்கு இடுப்பு கை, கால் வலி மற்றும் மாதவிடாய் போன்ற பிரச்சினைகள் நீங்கும். மாணவர்கள் பகுதி படிப்பில் சேருவர்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

தனுசு

பெண்களுக்கு கலைகளில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலதிபர்களிடமிருந்து வேலையாட்கள் தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். குலதெய்வக் கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வேலையில் தங்கள் கணவரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை

மகரம்

வியாபாரிகளுக்கு வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகஸ்தர்கள் மேலிடத்தினரிடம் பகைத்துக் கொள்ளாதீர்கள். தம்பதிகளிடம் ஒற்றுமை கூடும். சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். காதலர்கள் மீண்டும் இணைவர். மாணவர்களின் நினைவாற்றல் கூடும். தேக ஆரோக்கியம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்

கும்பம்

புதிய வகையில் தங்கள் வியாபாரத்தை பெருக்குவீர்கள். பல கிளைகள் துவங்க திட்டமிடுவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். எதிரிகள் சரணடைவர். பங்குச் சந்தையில் சற்று கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

மீனம்

இன்று மனக்குழப்பம் நிறைந்த நாளாக மூல நட்சத்திரக்காரர்களுக்கு இருக்கும். காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

X

Daily Thanthi
www.dailythanthi.com