ஆடி கியூ 8 இ-ட்ரோன் அறிமுகம்


ஆடி கியூ 8 இ-ட்ரோன் அறிமுகம்
x

சொகுசு மற்றும் பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் ஆடி நிறுவனம் கியூ 8 இ-ட்ரோன் என்ற பெயரிலான புதிய மாடல் காரை அறிமுகம் செய்கிறது. இத்துடன் ஸ்போர்ட் பேக் மாடலும் அறிமுகம் செய்யப்படுகிறது. எஸ்.யு.வி. மாடலில் ஆடி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள பேட்டரியில் இயங்கும் கார்கள் இவை. மிகவும் சக்தி வாய்ந்த பேட்டரிகள் (95 கிலோவாட் அவர்) பயன்படுத்தப்பட்டுள்ளதால் இவை முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 490 கி.மீ. தூரம் வரை ஓடும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இவை 340 ஹெச்.பி. திறனை 664 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும்.

இதில் பிரீமியம் மாடல் 408 ஹெச்.பி. திறனை 664 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். இந்த மாடல் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 582 கி.மீ. தூரம் வரை ஓடும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 22 கிலோவாட் ஏ.சி. சார்ஜரும், விரைவாக சார்ஜ் ஆக 170 கிலோவாட் டி.சி. சார்ஜரும் அளிக்கப்படுகிறது. முன் இருக்கையில் ஹீட்டிங், காற்றோட்ட வசதி மற்றும் மசாஜ் வசதி உள்ளது.

இதில் 10.1 அங்குல இன்போடெயின் மென்ட் சிஸ்டம், 8.6 அங்குல அளவில் வாகன செயல்பாடுகளைக் குறிக்கும் திரை, முன்புறம் டேஷ் போர்டில் 2 தொடுதிரை, திறந்து மூடும் வகையிலான மேற்கூரை, இனிய இசையை வழங்க 16 ஸ்பீக்கர்கள் உள்ளது. 360 டிகிரியில் சுழலும் கேமரா, நான்கு நிலை காரின் குளிர் நிலையை கட்டுப்படுத்தும் வசதி, டயர் காற்றழுத்தத்தை அளவிடும் கருவி உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்களாகும்.

இதன் விலை சுமார் ரூ.1.15 கோடி.


Next Story