பயனற்ற பொருட்களில் உருவான அவதார்-2 பட கதாபாத்திரங்கள்

பயனற்ற பொருட்களில் அவதார்-2 பட கதாபாத்திரங்களை தயாரித்து அரசு பள்ளி மாணவர்கள் அசத்தினர்.
பயனற்ற பொருட்களில் உருவான அவதார்-2 பட கதாபாத்திரங்கள்
Published on

பாகூர்

பாகூர் அருகே சேலியமேடு கிராமத்தில் வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி மாணவர்கள் பயனற்ற பொருட்களை கொண்டு கலை பொருட்கள் தயாரித்து வருகின்றனர். அழிவின் உயிர்ப்பு என்ற பெயரில் இப்பள்ளியில் இயங்கும் கலைக்கூடத்தில், கிராமப்புறத்தில் கிடைக்க கூடிய சுரைக்காய் குடுவை, தென்னை, பனை மற்றும் வாழை மரங்களின் காய்ந்த இலை, பூ, மட்டைகளை கொண்டு மாணவர்கள் பல கலை படைப்புகளை உருவாக்கி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது, மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படும் அவதார்-2 படத்தின் கதாபாத்திரங்களை பயனற்ற பொருட்களை கொண்டு தத்ரூபமாக உருவாக்கி பள்ளியில் காட்சிப்படுத்தியுள்ளனர். பள்ளியின் ஓவிய ஆசிரியர் உமாபதி வழிகாட்டுதலின்படி மாணவர்கள் நவநீத கிருஷ்ணன், சந்தோஷ் ஆகியோர் இந்த படைப்புகளை உருவாக்கி அசத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com