

சென்னை,
தங்கம், வெள்ளி விலை ‘கிடுகிடு'வென ஏறுவது, பின்னர் ‘மளமள'வென சரிவது என கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி வருகிறது. அந்த வகையில் தங்கம் விலை கடந்த வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.1,190-ம், சவரனுக்கு ரூ.9,520-ம் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,34,400 என்ற இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது.
வெள்ளி விலையும் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ரூ.425-க்கு விற்கப்பட்டது. இதுவும் வரலாறு காணாத உச்சமாக பார்க்கப்பட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களாக தங்கம், வெள்ளி விலை ஏறிய வேகத்தில் இறங்கி வருகிறது.
அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7,600-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.15,850-க்கும், ஒரு சவரன் ரூ.1,26,800-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.405-க்கு விற்கப்பட்டது.
இதனை கடந்த சனிக்கிழமையும் தங்கம், வெள்ளி விலை மீண்டும் சரிந்தது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7,600-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.14,900-க்கும், ஒரு சவரன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.30-ம், கிலோவுக்கு ரூ.30 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.320-க்கும், ஒரு கிலோ ரூ.3,20,000-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், தங்கம், வெள்ளி விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7,600-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.13,950-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20-ம், கிலோவுக்கு ரூ.20 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.300-க்கும், ஒரு கிலோ ரூ.3,00,000-க்கும் விற்பனையானது. தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்தது நகை பிரியர்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.