மணிரத்னம் படத்திற்காக கையை வெட்டவும் தயார் - வைரலாகும் பிரபல நடிகையின் கருத்து

இயக்குனர் மணிரத்னத்தை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று இவர் கூறினார்.
சென்னை,
இயக்குனர் மணிரத்னம் பற்றி இந்த நடிகை கூறிய கருத்துகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இயக்குனர் மணிரத்னத்தை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று இவர் கூறினார். அவர் வேறுயாருமில்லை நடிகை பிரியாமணிதான்.
மணிரத்னம் பற்றி அவர் பேசுகையில், 'மணி சாரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தால், அவரது படத்தில் நடிக்க என் கையை வெட்டவும் தயாராக இருக்கிறேன். அவரது படத்தில் நடிப்பது ஒரு பெரிய ஆசீர்வாதம். அதை நான் என் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். அது எந்த மாதிரியான வேடமாக இருந்தாலும் பரவாயில்லை' என்றார். இந்த கருத்துகள் தற்போது வைரலாகி வருகின்றன.
பிரியாமணி முன்பு மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் விக்ரமின் சகோதரியாக நடித்திருந்தார்.
Related Tags :
Next Story






