திருமணத்திற்கு பிறகு ஒரு மாதம்... விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா எடுத்த முடிவு

விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனாவுக்கு வரும் 26-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் நடக்கவிருக்கிறது.
திருமணத்திற்கு பிறகு ஒரு மாதம்... விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா எடுத்த முடிவு
Published on

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா. இருவருமே காதலித்து வந்தாலும், வெளிப்படையாக தங்களுடைய காதலை அறிவிக்காமல் மறைத்து வந்தனர். இருந்தாலும் இவர்களின் காதல் பற்றிய செய்திகள் அவ்வபோது வெளியாகி வந்தது. இந்த நிலையில், விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனாவுக்கு வரும் 26-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் நடக்கவிருக்கிறது.

அந்த திருமணத்தை தங்களுக்கு பிடித்த மாதிரி நடத்த விஜய்யும், ரஷ்மிகாவும் முடிவு செய்திருக்கிறரா்களாம். இரண்டு பேருமே திரையுலகில் இருந்தாலும் தங்களின் திருமணத்திற்கு பிரபலங்கள் யாரையும் அழைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. திருமணம் முடிந்த கையோடு இருவருமே ஒரு மாதம் சோஷியல் மீடியா மற்றும் சினிமா பணிகளில் இருந்து முழுமையாக விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகு மார்ச் 4-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது. இதில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கலந்துக் கொள்வார்கள் என்று தெரிகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com