திகில் வெப் தொடரில் அஞ்சலி

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் அஞ்சலி, ஜான்ஸி என்ற வெப் தொடரில் நடிக்கிறார்.
திகில் வெப் தொடரில் அஞ்சலி
Published on

வெப் தொடர்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு உள்ளது. ஆங்கில வெப் தொடர்களை அதிக பொருட் செலவில் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக எடுத்து வெளியிடுகிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் அதிக வெப் தொடர்கள் தயாராகி ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி வருகின்றன. முன்னணி நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் அஞ்சலி, ஜான்ஸி என்ற வெப் தொடரில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகும் இந்த தொடரை தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான திரு டைரக்டு செய்கிறார். நடிகர் கிருஷ்ணா தயாரித்துள்ளார். பழைய நினைவுகளை மறந்த அஞ்சலிக்கு திடீரென நினைவு வந்து எதிரிகளை அடையாளம் கண்டு மோதும் திகில் தொடராக தயாராகி உள்ளது. இதில் சாந்தினி சவுத்ரி, ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com