தனுஷின் 55வது படத்தில் இணைந்த நடிகர் மம்முட்டி

நடிகர் மம்முட்டி இந்த படத்தில் இணைந்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே பலமடங்கு அதிகரித்துள்ளது.
தனுஷின் 55வது படத்தில் இணைந்த நடிகர் மம்முட்டி
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், இட்லி கடை, தேரே இஸ்க் மெய்ன் ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து தொடர்ந்து பிஸியான நடிப்பில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில், போர்தொழில் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான கர திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இந்த படம், இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து, நடிகர் தனுஷ் தனது 55-வது படமாக அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆகே டெக்ஸ்டைல்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘தனுஷ் 55’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகைகள் ஸ்ரீ லீலா மற்றும் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றுகிறார். விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்முட்டி, தனுஷ் 55 படத்தில் இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் வுண்டர்பார் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் மம்முட்டி இந்த படத்தில் இணைந்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே பலமடங்கு அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com