

சென்னை,
தேசிய விருதுகள் பெற்றதை பெருமையாக கருதுவதாக வீடியோ பதிவில் நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
தேசிய விருதுகள் பெற்றதை பெருமையாக கருதுகிறேன். தேசிய விருதுகளை திருப்பித்தருவதாக கூறவில்லை அது என் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.
பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை சம்பவத்தில் பிரதமர் மவுனம் காப்பது வருத்தம் அளிக்கிறது. நான் எந்த கட்சியையும் சாராதவன், குடிமகனான என்னை பிரதமரின் மவுனம் காயப்படுத்துகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கர்நாடக நிகழ்ச்சியில் தேசிய விருதுக்ளை திருப்பித்தருவதாக பிரகாஷ்ராஜ் பேசியதாக செய்திகள் வெளியானதிற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.