திருப்பதி ஏழுமலையானை தரிசித்த நடிகை கீர்த்தி ஷெட்டி


Actress Keerthy Shetty visits Tirupati
x

தனது தாயாருடன் வந்த கீர்த்தி ஷெட்டி விஐபி தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டார்.

திருப்பதி ,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி சாமி தரிசனம் செய்தார். தனது தாயாருடன் வந்த அவர் விஐபி தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டார். தொடர்ந்து கோவிலுக்கு வெளியே வந்த அவருடன், ரசிகர்கள் செல்பி எடுத்து மகிந்தனர்.

தென்னிந்திய சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி ஷெட்டி. தற்போது தமிழில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ''லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படம் டிசம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.

அதனை தொடர்ந்து வா வாத்தியார், ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில், வா வாத்தியார் படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகிறது. அதுமட்டுமில்லாமல், ஜீனி படமும் டிசம்பர் மாதத்தை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story