41வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை நயன்தாரா

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை,
கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ஜயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. இவர் தற்போது தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கிறார். அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
நடிகை நயன்தாரா திரைப்படங்களில் நடிப்பதோடு, சொந்தமாக பல தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அழகு சாதனப்பொருட்களை சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.
தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்து பான் இந்தியா நாயகியாகவும் ஜொலித்து வரும் நடிகை நயன்தாரா இன்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.






