'படை தலைவன்' படத்தில் ஏஐ விஜயகாந்த்!


படை தலைவன் படத்தில் ஏஐ விஜயகாந்த்!
x
தினத்தந்தி 9 Jun 2025 10:59 AM IST (Updated: 15 Jun 2025 9:40 PM IST)
t-max-icont-min-icon

அன்பு இயக்கியுள்ள 'படை தலைவன்' படத்தில் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கேப்டன் விஜயகாந்தை நடிக்க வைத்துள்ளனர்.

சென்னை,

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் முதல் படமாக 'சகாப்தம்' என்ற திரைப்படம் வெளியானது. பின்னர் 'மதுரை வீரன்' என்ற படத்தில் நடித்தார். இந்த நிலையில், தற்போது 'படைத்தலைவன்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

டிரைக்டர்ஸ் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் அன்பு இயக்கியுள்ளார். மேலும், இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படம் வருகிற 13-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் 'படை தலைவன்' படம் குறித்து பேசியுள்ளார். அதாவது, படை தலைவன் படத்தில் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கேப்டன் விஜயகாந்தை நடிக்க வைத்துள்ளோம் .அனைவரும் படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story