

எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்தியில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இது வந்தது. தற்போது மீண்டும் வினோத் இயக்கும் 'வலிமை' படத்தில் அஜித் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. தீபாவளியை முன்னிட்டு இப்படம் ரிலீசாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக படக்குழு அறிவித்து உள்ளது. வலிமை படம் முடிந்துள்ளதால் அடுத்து அவர் நடிக்க உள்ள புதிய படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
இந்த நிலையில் 3-வது முறையாக வினோத் இயக்கும் படத்தில் அஜித் குமார் மீண்டும் நடிக்க இருப்பதாக போனி கபூர் உறுதிபடுத்தி உள்ளார். இந்த படம் மங்காத்தா சாயலில் உருவாக இருப்பதாகவும் இதில் அஜித்குமார் வில்லனாக நடிக்கிறார் என்றும் தகவல் கசிந்து இணையதளங்களில் பரவி வருகிறது. ஏற்கனவே பில்லா, மங்காத்தா படங்களில் அஜித் நடித்த எதிர்மறையான வில்லன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.