ரேஸிங் சர்க்யூட்டில் ரசிகர்களை பார்த்து உற்சாகம் அடைந்த அஜித்

அஜித்குமார் பங்கேற்க உள்ள செபாங்க் சர்க்யூட் போட்டிக்கான தகுதிச் சுற்று இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது. இந்த அணி ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. தொடர்ந்து பல்வேறு பந்தயங்களில் பங்கேற்க இந்த அணி திட்டமிட்டுள்ளது.
அதனை தொடர்ந்து அஜித், மலேசியாவில் நடைபெறும் செபாங்க் சர்க்யூட் போட்டியில் பங்கேற்க கடந்த வாரம் மலேசியா சென்றடைந்தார். போட்டி துவங்கும் முன் மலேசிய பத்துமலை முருகன் கோவிலில் சாமி சரிதனம் செய்தார்.
அஜித்குமார் பங்கேற்க உள்ள செபாங்க் சர்க்யூட் போட்டிக்கான தகுதிச் சுற்று இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ளது. இதையடுத்து சனிக்கிழமை காலை இறுதி போட்டி நடக்க உள்ளது. இதற்கிடையில், அஜித்குமார் ரேஸிங் சர்க்யூட்டில் நடந்து வரும் போது அவரை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அதனை பார்த்த அஜித் உற்சாகம் அடைந்து ரசிகர்களை பார்த்து கையசைத்தார். பின்னர், தன்னுடைய அணியுடன் சேர்ந்து போட்டிக்காக தயாரானார்.






