

பிராகரண்ட் நேச்சர் பிலிம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வேம்பயர் த்ரில்லர் திரைப்படமான ‘ஹாப்’-ன் இரண்டாவது போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. படத்தின் இருண்ட மற்றும் தீவிரமான உலகத்தை இந்த போஸ்டர் வெளிப்படுத்துகிறது. ‘பிரணயம்’, ‘பரிவார்’, ‘கோலம்’ போன்ற படங்களைத் தயாரித்த பிராகரண்ட் நேச்சர் பிலிம் கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் அன்னே சஞ்சீவ் மற்றும் சஞ்சீவ் பிகே இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். ‘கோலம்’ மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சம்ஜத் இந்த படத்தை இயக்கியுள்ளார். வேம்பயர் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இரண்டாம் பார்வை போஸ்டரின் அடர் நிறங்களும், காட்சிகளும் படத்தின் ஆன்மாவை வெளிப்படுத்துகிறது.
இந்த போஸ்டரில் அமலா பால், ரஞ்சித் சஜீவ், ஐஸ்வர்யா ராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், நடிகர் அப்பாஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் கம்பேக் கொடுக்கிறார். ஹாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஆக்ஷன் கொரியோகிராபர் வெரி ட்ரை யூலிஸ்மேன் இந்த படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளது இந்த படத்தின் மற்றொரு முக்கிய சிறப்பம்சம். இது படத்தின் தரத்தை மேலும் உயர்த்துகிறது.
கதையின் வில்லனாக ரஞ்சித் சஜீவ் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜ் மற்றும் அமலா பால் நடித்துள்ளனர். நடிகர் அப்பாஸின் கம்பேக்கும் கதைக்கு வலுசேர்க்கும். பான்-இந்திய அளவில் பன்மொழிகளில் பிரம்மாண்டமான திரைப்படமாக ‘ஹாப்’ உருவாகியுள்ளது. பல்வேறு லொகேஷன்களில் படமாக்கப்பட்டுள்ள ‘ஹாப்’ வேம்பயர் ஜானரில் மலையாள சினிமாவைத் தாண்டி இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களை ஈர்க்கும் முக்கியமான படமாக வெளியாக இருக்கிறது.