பாவனாவின் “அனோமி” பட டிரெய்லர் வெளியானது

ரியாஸ் மாரத் இயக்கத்தில் பாவனா, ரகுமான் நடிக்கும் ‘அனோமி’ படம் வரும் 6ம் தேதி வெளியாகிறது.
பாவனாவின்  “அனோமி” பட டிரெய்லர் வெளியானது
Published on

நடிகை பாவனா தனது 90வது திரைப்படமான ‘அனோமி: தி ஈக்வேஷன் ஆப் டெத்’ படத்தில் நடித்துள்ளார். இந்த ஆக்ஷன் திரில்லர் படத்தை அறிமுக இயக்குநர் ரியாஸ் மரத் எழுதி, இயக்கியுள்ளார். வழக்கமான குற்றவியல் திரில்லர் எல்லைகளைத் தாண்டி, பேரலெல் இன்வெஸ்டிகேஷன் எனும் கதை சொல்லும் முறையில், உணர்ச்சிகளும் பதற்றமும் கலந்த திரைக்கதை அமைத்துள்ளார்.

படத்தில் பாவனா, ‘சாரா’ என்ற கதாபாத்திரத்தில் தடயவியல் நிபுணராக நடித்துள்ளார். ரகுமான் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை டி சீரிஸ் பிலிம் மற்றும் பனோரமா ஸ்டூடியோஸ் வழங்க குமார் மங்கத் பாதக் மற்றும் அபிஷேக் பாதக் தயாரித்துள்ளனர். ராஜேஷ் மேனன், ராம் மிர்சந்தானி, நிதின் குமார் மற்றும் மன்சூத் டி.பி. இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் பிளிட்ஸ்கெர்க் பிலிம்ஸ், ஏபிகே சினிமா மற்றும் நடிகை பாவனாவின் சொந்த நிறுவனமான பாவனா பிலிம் புரொடக்சனும் தயாரிப்பில் இணைந்துள்ளன.

இந்நிலையில், ‘அனோமி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் 6ம் தேதி வெளியாகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com