''வெற்றிகளை விட தோல்விகள்தான் எனக்கு அதிகம் கற்றுக் கொடுத்தன''- பூமி பெட்னேகர்


Bhumi pednekar reveals how she faces online trolls
x
தினத்தந்தி 26 Sept 2025 10:45 AM IST (Updated: 26 Sept 2025 10:48 AM IST)
t-max-icont-min-icon

சமூக ஊடகங்களில் பெண்களை குறிவைத்து டிரோல்கள் வருவதாக பூமி பெட்னேகர் கூறினார்.

சென்னை,

பிரபல பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர். தற்போது ''தல்தல்'' என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இதில், அவர் ஒரு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இந்தத் தொடர் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில், சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட பூமி பெட்னேகர் பெண்களுக்கு எதிராக பரவும் டிரோல் பற்றி பேசினார். குறிப்பாக சமூக ஊடகங்களில் பெண்களை குறிவைத்து டிரோல்கள் வருவதாக அவர் கூறினார்.

அவர் கூறிகையில்,'' டிரோல்களுக்கு நான் பழகிவிட்டேன். முன்பு அதை சமாளிக்க எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் எனக்கு தைரியம் இல்லை. ஆனால் இப்போது அந்த நிலைமை மாறிவிட்டது. என்னை பற்றிய டிரோல்களை என்னால் கையாள முடியும் என்பதை நான் கற்றுக்கொண்டேன். வாழ்க்கையில் தோல்விகள், வெற்றிகளை விட எனக்கு அதிகம் கற்றுக் கொடுத்துள்ளன. நினைத்ததை விட நான் மிகவும் உறுதி கொண்டவர் என்பதை அவை எனக்குக் காட்டியுள்ளன'' என்றார்.

பூமி பெட்னேகர் கடைசியாக 'தி ராயல்ஸ்' என்ற நெட்பிளிக்ஸ் தொடரில் இஷான் கட்டருடன் இணைந்து நடித்திருந்தார்.

1 More update

Next Story