ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தில் வில்லனாக பாலிவுட் நட்சத்திரம்

ரிஷப் ஷெட்டி ‘அனுமான்’ மற்றும் ‘சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ அகிய படங்களில் நடித்து வருகிறார்.
சென்னை,
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் புதிய படத்தில் நடிகர் ரிஷப் ஷெட்டி நடிக்கிறார்.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் ‘காந்தாரா 2’ கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் ரூ.800 கோடிக்கு மேல் வசூலித்தது.
இப்படத்தையடுத்து ரிஷப் ஷெட்டி ‘அனுமான்’ மற்றும் ‘சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ அகிய படங்களில் நடித்து வருகிறார். சத்ரபதி சிவாஜி படத்தை சந்தீப் சிங் இயக்குகிறார். இப்படம் 2027-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் பிரபல பாலிவுட் நட்சத்திரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, விவேக் ஓபராய் அவுரங்கசீப் வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story






