காதலர் தினத்தை முன்னிட்டு "டிசி" படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் "டிசி" படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு "டிசி" படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
Published on

சென்னை,

'மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ' ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் கீழ் தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார். இதற்காகவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

சமீபத்தில் ரஜினியை வைத்து 'கூலி' என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதனை தொடர்ந்து கைதி 2, விக்ரம் 2 ஆகிய படங்களை இயக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இது தவிர தனது ஜிஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்.

இதற்கிடையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக 'டிசி' என்ற படத்தில் நடிக்கிறார். இதில், தேவதாஸ் என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜும், சந்திரா என்ற கதாபாத்திரத்தில் வாமிகா கபியும் நடிக்கின்றனர். அதிரடி ஆக்சன் கதைக்களத்தில் உருவாக இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு டிசி படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com