கவின் நடித்த 'கிஸ்' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?


கவின் நடித்த கிஸ் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
x
தினத்தந்தி 20 Sept 2025 11:45 AM IST (Updated: 24 Sept 2025 7:55 AM IST)
t-max-icont-min-icon

சதீஷ் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ‘கிஸ்’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னை,

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவர் கவின். இவர் 'நட்புன்னா என்னானு தெரியுமா', 'லிப்ட்', 'டாடா' உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

தற்போது இவரது நடிப்பில் கிஸ் என்ற படம் நேற்று வெளியாகி உள்ளது. இந்த படத்தினை அறிமுக இயக்குனர் சதீஷ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக 'அயோத்தி' படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் மிர்ச்சி விஜய், விடிவி கணேஷ், ராவ் ரமேஷ், தேவயானி என பலரும் நடித்திருந்தனர். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது.

பேண்டஸி ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில் உருவான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் கிஸ் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாளில் ரூ. 70 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இனிவரும் நாட்கள் வாரஇறுதி நாட்கள் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story