பிரதமர் மோடி பிடிக்குமா? ராகுல் காந்தி பிடிக்குமா?-நடிகை டாப்சியின் சுவாரஸ்ய பதில்

நடிகை டாப்சியிடம், பிரதமர் நரேந்திர மோடி, ராகுல்காந்தி ஆகியோரில் உங்களுக்கு பிடித்தவர் யார் என கேள்வி எழுப்பப்பட்டது.
பிரதமர் மோடி பிடிக்குமா? ராகுல் காந்தி பிடிக்குமா?-நடிகை டாப்சியின் சுவாரஸ்ய பதில்
Published on

ஆடுகளம், காஞ்சனா-2 உள்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் டாப்சி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள படங்களில் நடித்து வரும் டாப்சி பிரபல பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ்போவை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வரும் டாப்சி சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றார்.

நேர்காணலில் டாப்சியிடம், பிரதமர் நரேந்திர மோடி, ராகுல்காந்தி ஆகியோரில் உங்களுக்கு பிடித்தவர் யார் என கேள்வி எழுப்பப்பட்டது. சிக்கலான கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத டாப்சி, நான் இன்னும் இந்தியாவில் வாழ நினைக்கிறேன் என சிரித்துக் கொண்டே கையெடுத்து கும்பிட்டார். டாப்சியின் பதில் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com