ஒரு நல்ல படத்த மிஸ் பண்ணிட்டோம்னு பீல் பண்ணாதிங்க!- விஜய் ஆண்டனி

பூக்கி ஒரு சூப்பர் படம் பாத்தவங்கட்ட கேளுங்க என்று விஜய் ஆண்டனி பதிவிட்டுள்ளார்.

ஒரு நல்ல படத்த மிஸ் பண்ணிட்டோம்னு பீல் பண்ணாதிங்க!- விஜய் ஆண்டனி
Published on

சென்னை,

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். தற்போது இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிமாணங்களில் கலக்கி வரும் விஜய் ஆண்டனி தற்போது 'பூக்கி' என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 13ந் தேதி வெளியான நிலையில், பூக்கி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வருகின்றன.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வணக்கம், நல்ல சினிமா விரும்பிகளே மற்றும் காதலன் காதலிகளே, நான் பூக்கி என்ற ஒரு நல்ல படத்த புது டேலன்ட்ஸ் வச்சு புரொடியூஸ் பண்ணி 2 நாளைக்கு முன்னால ரிலீஸ் பண்ணிருக்கேன். பூக்கி ஒரு சூப்பர் படம் பாத்தவங்கட்ட கேளுங்க மிஸ் பண்ணாம பாருங்க, அப்புறம், ஒரு நல்ல படத்தை தியேட்டர்-ல மிஸ் பண்ணிட்டோம்னு பீல் பண்ணாதிங்க. நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com