ரீ-ரிலீஸாகும் கவுதம் மேனனின் “மின்னலே” படம்

மாதவன் - ரீமா சென் நடிப்பில் வெளியான ‘மின்னலே’ படம் வரும் 13ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.
ரீ-ரிலீஸாகும்  கவுதம் மேனனின் “மின்னலே” படம்
Published on

சென்னை,

‘மின்னலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் கவுதம் வாசுதேவ் மேனன். மாதவன், அப்பாஸ், ரீமா சென், விவேக் நாகேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக அப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழ் சினிமாவின் ஒரு சிறந்த படமாக அமைந்தது ‘மின்னலே’. இப்படம் பிப்ரவரி 2, 2001 அன்று வெளியானது.

இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ்த் திரையிசை உலகையே பெரும் வியப்பில் ஆழ்த்தினார். படத்தில் இடம்பெற்ற ஒன்பது பாடல்களும் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றன. பின்னணி இசையும் தீம் இசைத் துணுக்குகளும்கூட ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. இதற்கு முன்பே சில படங்களில் பாடல்களை எழுதியிருப்பவரான தாமரை இந்தப் படத்தில் எழுதிய 'வசீகரா', 'இவன் யாரோ' உள்ளிட்ட பாடல்களின் மூலம் அனைவராலும் கவனிக்கப்பட்டார். இந்தப் படத்துக்குப் பிறகு கவுதம் -ஹாரிஸ்-தாமரை கூட்டணி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத வெற்றிக் கூட்டணிகளில் ஒன்றாக இன்றளவும் திகழ்கிறது.

இந்நிலையில், நேற்றோடு ‘மின்னலே’ படம் வெளியாகி 25 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இதைமுன்னிட்டு, ‘மின்னலே’ திரைப்படம் வரும் பிப்ரவரி 13ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com