ஜி.வி.பிரகாஷின் “ஹாப்பி ராஜ்” படத்தின் “ஆடினே இருப்பேன்” பாடல் அப்டேட்

‘ஹாப்பி ராஜ்’ படத்தை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனர் மரியா இளஞ்செழியன் இயக்கியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷின் “ஹாப்பி ராஜ்” படத்தின் “ஆடினே இருப்பேன்” பாடல் அப்டேட்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக் வெளியான படம் 'பிளாக்மெயில்'. மு.மாறன் இயக்கிய இதில் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஜிவி பிரகாஷ் ‘ஹாப்பி ராஜ்’ புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனர் மரியா இளஞ்செழியன் இயக்கி வருகிறார். நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி வரும் இதில் நடிகர் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜிவிக்கு ஜோடியாக நடிகை கெளரி பிரியா நடித்துள்ளார். ‘ஹாப்பி ராஜ்’ படத்தின் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், ‘ஹாப்பி ராஜ்’ படத்தின் முதல் பாடலான ‘ஆடினே இருப்பேன்’ வரும் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com