

சென்னை,
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் பின் படிப்படியாக படங்களில் நடிக்க தொடங்கி தற்போது பிரபல நடிகராக வலம் வருகிறார் ஹரிஷ் கல்யாண். இவர் நடிப்பில் வெளியான ‘பார்க்கிங்’ மற்றும் ‘லப்பர் பந்து’ திரைப்படங்கள் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.
‘லிப்ட்’ பட இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் தனது 15வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகனாக ஹரிஷ் கல்யாணும் நாயகியாக பிரீத்தி முகுந்தனும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ், இடா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் டைட்டில் புரோமோ வெளியாகி வைரலானது.
வட சென்னையின் பின்னணியில், ராப் இசைக் கலையை மையமாக வைத்து இப்படத்தினை உருவாக்கியுள்ளது படக்குழு. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஹரிஷ் கல்யாண் இப்படத்தில் ராப் இசைக் கலைஞராக நடித்துள்ளார்.
இந்நிலையில், ‘தாஷமக்கான்’ படத்தின் முதல் பாடலான ராப் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரிட்டோ மைக்கல் இசையமைத்துள்ளார்.