நாளை தியேட்டர்களில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ! (06.02.2026)

நாளை தியேட்டர்களில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
நாளை தியேட்டர்களில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ! (06.02.2026)
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் வருகிற 6ந் தேதி (நாளை) தியேட்டர்களில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

வித் லவ்

அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், நடிகை அனஸ்வரா ராஜன் படம் வித் லவ். எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து தயாரித்து இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

அனோமி

அறிமுக இயக்குநர் ரியாஸ் மரத் எழுதி இயக்கிய படம் 'அனோமி: தி ஈக்வேஷன் ஆப் டெத்'. ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகை பாவனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

காதல் கதை சொல்லவா

பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் சார்பில், ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "காதல் கதை சொல்லவா”. இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் நடிகர் நகுல் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர்கள் விஜய் சேதுபதி, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

யோகிடா

கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'யோகிடா'. சாய் தன்ஷிகா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை ஜப்பட்மா சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அருணகிரி மற்றும் ராஜ்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஷாயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரெட் லேபிள்

கே.ஆர்.வினோத் இயக்கத்தில் ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ள படம் ரெட் லேபிள். கதாநாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் நடித்துள்ள இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார், முனிஷ்காந்த் நடித்துள்ளனர்.

கில்லி மாப்பிள்ளை

கில்லி மாப்பிள்ளை என்பது கே. என். பத்மராஜா இயக்கி எழுதிய திரைப்படமாகும். ஹனுமான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் திவ்யா தாமஸ், டி.எஸ்.ஆர், மற்றும் கிரேன் மனோகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பி.வி. குமார் இசையமைத்துள்ளார்.

யுபோரியா

இயக்குநர் குணசேகர், இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'யூபோரியா'. இந்தப் படத்தில் பூமிகா சாவ்லா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், புதுமுக நடிகர் விக்னேஷ் கவிரெட்டி, கவுதம் மேனன் மற்றும் ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமான சாரா அர்ஜுனும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அஷகல் ஆயிரம்

அஷகல் ஆயிரம் என்பது ஜி. பிரஜித் இயக்கத்தில், ஸ்ரீ கோகுலம் கோபாலன் தயாரிப்பில் உருவாகி வரும் ஒரு மலையாளத் திரைப்படமாகும். இதில் ஜெயராம் மற்றும் காளிதாஸ் ஜெயராம் தந்தை-மகன் ஜோடியாக இணைந்து நடித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com