நாக்கை கட்டுப்படுத்த முடியாமல் நிறைய பரோட்டா சாப்பிட்டேன் - நித்யா மேனன்


நாக்கை கட்டுப்படுத்த முடியாமல் நிறைய பரோட்டா சாப்பிட்டேன் - நித்யா மேனன்
x

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள 'தலைவன் தலைவி' படம் வரும் 25-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தலைவன் தலைவி'. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு, பாபா பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குடும்பப் பின்னணியைக் கதையாக வைத்து உருவாகி உள்ள இந்த படம் வரும் 25-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி புரோட்டா மாஸ்டராக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரிக்க செய்தது.

இந்த நிலையில், நடிகை நித்யா மேனன் பேட்டி ஒன்றில், "மதுரையில் சூட்டிங் நடந்தபோது, என்னால் என் நாக்கை கட்டுப்படுத்த முடியாமல் நிறைய பரோட்டா சாப்பிட்டேன். அத்துடன் பரோட்டா போடவும் கற்றுக்கொண்டேன். படத்துக்காக மட்டுமல்ல, படப்பிடிப்பு இல்லாத நேரத்திலும் நிறைய பரோட்டா சாப்பிட்டேன்" என்று சுவரஸ்யமாக பேசினார்.

1 More update

Next Story