''அது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது'' - ''காந்தாரா'' பட நிகழ்வில் கவனம் ஈர்த்த ருக்மிணி வசந்த்

''காந்தாரா சாப்டர் 1'' படக்குழு நேற்று செய்தியாளர்களை சந்தித்தது.
சென்னை,
நடிகை ருக்மிணி வசந்த், ''காந்தாரா சாப்டர் 1'' படத்தின் பிரஸ் மீட்டின்போது , படத்தில் அவர் நடித்துள்ள கதாபாத்திரத்தின் தோற்றத்தில் கலந்துகொண்டார். அது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அப்போது அவர் சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அவர் பேசுகையில்,
"காந்தாரா சாப்டர் 1-ல் நடிக்க வாய்பளித்ததற்கு ரொம்ப நன்றி ரிஷப்ஷெட்டி சார். ஒரு மனிதராக காந்தாரா சாப்டர் 1 என்னை பெரிதும் மாற்றிவிட்டது.
சப்த சாகரலு தாதி - சைட் ஏ பட பிரீமியரின்போது, நீங்கள் என் நடிப்பை மிகவும் பாராட்டியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, அது மிகவும் உணர்ச்சிவசமானது" என்றார்.
கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி 'காந்தாரா சாப்டர் 1' என்ற படத்தினை இயக்கி நடித்துள்ளார். இதில் நடிகை ருக்மிணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.






