சசிகுமாருடன் நிறைய படங்கள் நடிக்க ஆசை - நடிகை சைத்ரா

ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா நடிப்பில் உருவான ‘மை லார்ட்’ திரைப்படம் வரும் 13ம் தேதி வெளியாகிறது.
சசிகுமாருடன் நிறைய படங்கள் நடிக்க ஆசை - நடிகை சைத்ரா
Published on

"ஜோக்கர், குக்கூ, ஜப்பான்" ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகனின் ‘மை லார்ட்’ படத்தில் சசிகுமார் நடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சர் நடித்துள்ளார். குரு சோகசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

படம் திரைக்கு வருவதற்கு சில தினங்களே உள்ள உள்ள நிலையில் படத்தின் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் படக்குழுவினர் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் படவசனங்களை பேசி, பாடல் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற படத்தின் கதாநாயகி சைத்ராவின் தோற்றம் ரசிகர்களை குதூகலப்படுத்தியது. விழாவில் பேசிய சைத்ரா “இந்த படம் மிக மிக இனிமையான அனுபவம். படத்தில் நிறைய கற்றுக் கொண்டேன். சசிகுமார் மிக ஜாலியானவர். அவருடன் நடித்தது நல்ல அனுபவம். அவருடன் இன்னும் நிறைய படம் நடிக்க ஆசை” என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com