’துரந்தர்’ - கதாநாயகி வேடத்தை நிராகரித்த பிரபல நடிகை?

துரந்தர் படத்தில் கதாநாயகியாக நடிக்க சாரா அர்ஜுன் முதலில் தேர்வு செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
’துரந்தர்’ - கதாநாயகி வேடத்தை நிராகரித்த பிரபல நடிகை?
Published on

சென்னை,

ரன்வீர் சிங் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’துரந்தர்’. ஆதித்யா தார் இயக்கிய இந்தப் படம் கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி வெளியானது. சுமார் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் ரூ. 1,300 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியது.

இதனால், இது அதிக வசூல் செய்த இந்திய படங்களில் ஒன்றாக மாறியது. இதில் அக்சய் கன்னா, சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், மாதவன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்தனர். மேலும், சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்தார். இது கதாநாயகியாக அவரது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read
அழகுக்காக அறுவை சிகிச்சை செய்தாரா நடிகை ரகுல் பிரீத் சிங் ? - வைரலாகும் வீடியோ
’துரந்தர்’ - கதாநாயகி வேடத்தை நிராகரித்த பிரபல நடிகை?

இதற்கிடையில், துரந்தர் படத்தில் கதாநாயகியாக நடிக்க சாரா அர்ஜுன் முதலில் தேர்வு செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு முன்பு, நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் இந்த வாய்ப்பு சென்றதாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில், அவர் தொடர்ச்சியாக படங்களின் பிஸியாக இருந்ததால் துரந்தர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை அவர் ஏற்கவில்லை என்று தெரிகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com