நானியின் 'தி பாரடைஸ்' படத்தில் இணைந்த கயாடு லோஹர்!

இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கி வரும் தி பாரடைஸ் படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ளது.
நானியின் 'தி பாரடைஸ்' படத்தில் இணைந்த கயாடு லோஹர்!
Published on

நானி நடிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளிவந்த படம் தசரா. தசரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமான 'தி பாரடைஸ்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது. தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

அனிருத் இசையமைத்து வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அடுத்தாண்டு மார்ச் 26ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், டிராகன் படத்தின் மூலம் பிரபலமான நடிகை கயாடு லோஹர் தி பாரடைஸ் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பாரா? அல்லது ஏதேனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com