“கயல்” வின்சென்ட் நடிக்கும் “அந்தோனி” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

“கயல்” வின்சென்ட் நடிக்கும் “அந்தோனி” படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
“கயல்” வின்சென்ட்  நடிக்கும் “அந்தோனி” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
Published on

இயக்குநர்கள் சுகிர்தன் கிறிஸ்துராஜா- ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இருவரும் இணைந்து இயக்கி வரும்‘அந்தோனி’ எனும் திரைப்படத்தில் 'கயல்' வின்சென்ட் , டி.ஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யாழ்ப்பாண கடற்புற வாழ்வியலை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில், இலங்கை நடிகர்களான சுதர்சன் ரவீந்திரன், சவுமி நடித்துள்ளனர்.

ஒரே கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே நிறைவடைந்திருக்கிறது . இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படம் இலங்கையில் போருக்குப் பின்னரான மக்கள் வாழ்க்கையின் சாரம் கொண்ட திரைப்படமாக இது உருவாகியுள்ளது.

இந்நிலையில், ‘அந்தோனி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டாணாக்காரன் இயக்குனர் தமிழ் வெளியிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com