25 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸாகும் மாதவனின் 'மின்னலே' திரைப்படம்

மாதவன் நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டில் வெளியாகி ஹிட் அடித்த 'மின்னலே' படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வருகிறார்கள்.
25 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸாகும் மாதவனின் 'மின்னலே' திரைப்படம்
Published on

சென்னை,

முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்கள் மீண்டும் திரைக்கு வந்து வசூல் சாதனை படைத்து வருகின்றன. 'படையப்பா', 'கில்லி', 'மங்காத்தா' படங்களை அதில் குறிப்பிட்டு சொல்லலாம்.

இதற்கிடையில் முன்னணி நடிகரான மாதவன் நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டில் வெளியாகி ஹிட் அடித்த 'மின்னலே' படத்தையும் மீண்டும் திரைக்கு கொண்டு வருகிறார்கள். கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் மாதவன், ரீமாசென், அப்பாஸ், விவேக் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்துமே 'ஹிட்' அடித்தன. படமும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று நல்ல வசூலையும் குவித்தது.

25 ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் மீண்டும் வருகிற 13-ந்தேதி காதலர் தினத்தையொட்டி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்தில் இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடுகிறார்.

டி.ராஜேந்தர் இயக்கி, நடித்த 'உயிருள்ளவரை உஷா' (1983) படமும் 43 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 13-ந்தேதி மீண்டும் திரைக்கு வருவது குறிப் பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com