“தி ராஜா சாப்” படத்தின் ஆக்‌ஷன் காட்​சிகளில் “டூப்​”பை பயன்​படுத்​தினே​னா?” - மாளவிகா மோக​னன் விளக்​கம்

பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ படம் கடந்த 6ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.
“தி ராஜா சாப்” படத்தின் ஆக்‌ஷன் காட்​சிகளில் “டூப்​”பை பயன்​படுத்​தினே​னா?” - மாளவிகா மோக​னன் விளக்​கம்
Published on

அதில் அவர், “‘தி ராஜா சாப்’படத்​தில் அனைத்து ஸ்டன்ட்​களை​யும் நானே செய்​தேன். நான் ஆக்‌ஷனை மிக​வும் ரசிக்​கிறேன். உடல் ரீதியாகக்கடும் சவாலை எதிர்​கொள்​வதும் புதிய விஷ​யங்​களைக் கற்​றுக்​கொள்​வதும் எனக்கு மகிழ்ச்​சியைத் தருகிறது. ஹீரோக்​கள் தாங்​களாகவே ஆக்‌ஷன் காட்​சிகளைச் செய்​தா​லும் படப்பிடிப்பு தளத்​தில் எப்போதும் ஒரு டூப் இருப்​பார் அவர்​கள் நிபுணர்​கள் என்​ப​தால், நடிகர்​களு​டன் இறுதி ஷாட்டை எடுப்​ப​தற்கு முன்​பு, ஆக்‌ஷன் இயக்​குநர் அவர்களுடன் ஒத்​திகை பார்ப்​பது வழக்​கம். அல்​லது சில ஷாட்கள் நடிகர்​களால் செய்ய முடி​யாத அளவுக்கு ஆபத்​தானவை என்று நினைக்​கும் போது, அதை அவர்​கள் செய்​வார்​கள்” என்று தெரி​வித்​துள்​ளார்.பிர​பாஸ் நடித்த ‘தி ராஜா சாப்’ திரைப்​படம், கடந்த ஜனவரி 9-ம் தேதி வெளி​யானது. இதில் மாளவிகா மோக​னன், நிதி அகர்​வால், ரித்தி குமார் என பலர் நடித்​துள்​ளனர். தமன் இசையமைத்திருந்தார்.

கிராபிக்ஸ் மற்றும் வி.எப்.எக்ஸ் காட்சிகளின் தரம், ஹாலிவுட்டுக்கு நெருக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இருந்தபோதிலும் இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

‘தி ராஜா சாப்’ படம் ஓடிடி-​யில் வெளி​யான பிறகு சமூக ஊடகங்​களில் ட்ரோலிங்கை எதிர்​கொண்டு வரு​கிறது. அதில் சண்​டைக் காட்​சிகளில் டூப்​களைப் பயன்​படுத்​தி​ய​தாக விமர்​சனம் எழுந்​தது. படத்​தில் மாளவிகா மோக​னன் போல உடையணிந்த ஸ்டன்ட் நடிகரின் புகைப்​படம் வைரலான​தால், அவரும் டூப்பை பயன்​படுத்​தி​ய​தாகக் கூறப்​பட்​டது.

இதற்கு பதிலளித்​துள்ள மாளவிகா மோக​னன், படத்​தில் தனக்​கான ஆக்சன் காட்​சிகளை தானே செய்​த​தாகத் தெளிவுபடுத்​தி​யுள்​ளார். தொழில்​முறை ஸ்டன்ட் கலைஞர்​கள் ஒத்​தி​கைக்​காகவோ அல்​லது ஆபத்​தான காட்​சிகளுக்​காகவோ மட்​டுமே இருக்​கிறார்​கள் என்று கூறி​யுள்ள அவர், கயிறு உதவி​யுடன் சண்​டைக்​காட்​சிகளில் தான் ஈடு​பட்ட வீடியோக்​களை பகிர்ந்​துள்​ளார்.

அதில் அவர், “‘தி ராஜா சாப்’படத்​தில் அனைத்து ஸ்டன்ட்​களை​யும் நானே செய்​தேன். நான் ஆக்‌ஷனை மிக​வும் ரசிக்​கிறேன். உடல் ரீதியாகக்கடும் சவாலை எதிர்​கொள்​வதும் புதிய விஷ​யங்​களைக் கற்​றுக்​கொள்​வதும் எனக்கு மகிழ்ச்​சியைத் தருகிறது. ஹீரோக்​கள் தாங்​களாகவே ஆக்‌ஷன் காட்​சிகளைச் செய்​தா​லும் படப்பிடிப்பு தளத்​தில் எப்போதும் ஒரு டூப் இருப்​பார் அவர்​கள் நிபுணர்​கள் என்​ப​தால், நடிகர்​களு​டன் இறுதி ஷாட்டை எடுப்​ப​தற்கு முன்​பு, ஆக்‌ஷன் இயக்​குநர் அவர்களுடன் ஒத்​திகை பார்ப்​பது வழக்​கம். அல்​லது சில ஷாட்கள் நடிகர்​களால் செய்ய முடி​யாத அளவுக்கு ஆபத்​தானவை என்று நினைக்​கும் போது, அதை அவர்​கள் செய்​வார்​கள்” என்று தெரி​வித்​துள்​ளார்.

'பட்டம் போலே' என்ற மலையாள படத்தின் மூலமாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர், மாளவிகா மோகனன். அதனைத்தொடர்ந்து கன்னடம், இந்தி மொழிகளிலும் படங்கள் நடித்து அசத்தி வருகிறார். 'பேட்ட' படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர் விஜய்யுடன் 'மாஸ்டர்' படத்திலும் நடித்து கலக்கினார். அதனை தொடர்ந்து கார்த்திக்கு ஜோடியாக 'சர்தார்-2' படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com