மோகன்லாலின் அரிய சாதனை...ஒரே வருடத்தில் ரூ.600 கோடி வசூல்

இந்த ஆண்டு மோகன்லாலின் மூன்று படங்கள் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளன.
திருவனந்தபுரம்.
மலையாள நடிகர் மோகன்லாலுக்கு இந்த ஆண்டு சிறப்பாக அமைந்திருக்கிறது. அவரது சமீபத்திய படமான ஹிருதயபூர்வம் ரூ. 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது.
இதன் மூலம் இந்த ஆண்டு அவரது மூன்று படங்கள் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளன. எல்2 எம்புரான் படம் ரூ. 268 கோடியும், தொடரும் ரூ. 235 கோடியும் வசூலித்தது. சமீபத்திய படமான ஹிருதயபூர்வமும் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.
மலையாளத் துறையில் ஒரே வருடத்தில் மூன்று நூறு கோடி வசூல் செய்த படங்களை கொடுத்து அரிய சாதனை படைத்திருக்கிறார் மோகன்லால். மேலும், ஒரே வருடத்தில் திரையுலகில். ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டிய மலையாள நடிகர் என்ற சாதனையையும் அவர் படைத்திருக்கிறார். சமீபத்தில் அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






