மிருணாள் தாகூர் - துல்கர் சல்மானின் முதல் ஆல்பம் பாடல் - இணையத்தில் வைரல்

’சீதா ராமம்’ படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான மிருணாள் தாகூர், தற்போது மீண்டும் துல்கர் சல்மானுடன் இணைந்துள்ளார்.
மிருணாள் தாகூர் - துல்கர் சல்மானின் முதல் ஆல்பம் பாடல் -  இணையத்தில் வைரல்
Published on

சென்னை,

மிருணாள் தாகூர் மற்றும் துல்கர் சல்மான் இணைந்து நடித்துள்ள முதல் ஆல்பம் பாடலான ’பீகி பீகி’ வெளியாகி இருக்கிறது.

’சீதா ராமம்’ படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான மிருணாள் தாகூர், தற்போது மீண்டும் துல்கர் சல்மானுடன் இணைந்துள்ளார். ஆனால், இம்முறை படத்திற்காக அல்ல, ஆல்பம் பாடலுக்காக. இப்பாடலை ஏ ஆர் ரகுமான் இசையில் ஏ.ஆர். அமீன் மற்றும் ஜஸ்லீன் ராயல் பாடியுள்ளனர். இப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read
ஐதராபாத்தில் மிருணாள்…துல்கருடன் புகைப்படம்: ‘சீதா ராமம் 2’ வருகிறதா?
மிருணாள் தாகூர் - துல்கர் சல்மானின் முதல் ஆல்பம் பாடல் -  இணையத்தில் வைரல்

மிருணாள் தாகூர் கடைசியாக தெலுங்கில் நடித்த படம் 'தி பேமிலி ஸ்டார்". துரதிர்ஷ்டவசமாக, அந்த படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து, அவர் நடிகர் அதிவி சேஷுடன் இணைந்து நடித்துள்ள 'டகோயிட்' திரைப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாக உள்ளது.

மற்றொரு புறம், நடிகர் துல்கர் சல்மான் கடந்த ஆண்டு 'காந்தா' திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் 'ஆகாசம்லோ ஓக தாரா' மற்றும் 'ஐ அம் கேம்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com