நானியின் “தி பாரடைஸ்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் உருவாகி வரும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 21ம் தேதி வெளியாகவுள்ளது.
நானியின் “தி பாரடைஸ்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

நானி நடிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளிவந்த படம் தசரா. தசரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமான ‘தி பாரடைஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது. தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகர்கள் மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

1980-களில் செகந்திராபாத் பின்னணியில் நடக்கும் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காகப் போராடும் தலைவராக நானி நடித்துள்ளார். முன்னதாக மார்ச் 26 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இப்படம் ஆகஸ்ட் 21 அன்று வெளியாகும் என்று பின்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு வெளியான ‘தி பாரடைஸ்’ படத்தின் கிளிம்ஸ் விடியோ இந்திய அளவில் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,‘தி பாரடைஸ்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘ஆயாசீர்’ பாடல் வரும் 24ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com