தனுஷ் 'டி55' படத்தின் புதிய அப்டேட்

தனுஷின் 55 வது படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார்.
தனுஷ் 'டி55' படத்தின் புதிய அப்டேட்
Published on: 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் 'இட்லி கடை. "தேரே இஸ்க் மெய்ன்" ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து, போர்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இந்த படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.

'கர' படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ், 'அமரன்' பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55 படத்தில் நடிக்க உள்ளார். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆகே டேக்ஸ்டியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தனுஷ் 55 என்ற டைட்டில் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளது. இதில் நாயகியான நடிகை ஸ்ரீ லீலா நடிக்க உள்ளார். சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், டி55 படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, நடிகை ஸ்ரீலீலாவின் கதாபாத்திரம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5 மணியளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com