

சென்னை,
தனக்கு அரசியலும் தெரியாது, அனுபவமும் கிடையாது என நடிகர் சிம்பு சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியது தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர், “இத்தனை வருடம் சினிமாவில் இருந்திருக்கிறார். கடைசியாக ஒரு படம் (ஜனநாயகன்) செய்திருக்கிறார். அது திரைக்கு வரவேண்டும், ஆதரவாக அவருக்காக நிற்க வேண்டும் என்றுதான் நான் டுவீட் செய்தேன்.
எனக்கு அரசியலும் தெரியாது, அதில் அனுபவமும் கிடையாது. அரசியல் பற்றி பேசுவதற்கு நான் சரியான ஆளும் கிடையாது. அவருடைய அரசியல் எதிர்காலத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன்" என்று கூறினார்.
சிம்பு தற்போது அரசன் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இதில், சிம்புவுடன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.