சண்முக பாண்டியனின் "படை தலைவன்" பட வசூல் இத்தனை கோடியா?


சண்முக பாண்டியனின் படை தலைவன் பட வசூல் இத்தனை கோடியா?
x

‘படை தலைவன்’ திரைப்படம் ஒரு வாரம் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

சென்னை,

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் கடந்த 13-ந் தேதி வெளியான படம் 'படைத்தலைவன்'. இந்த படத்தினை இயக்குனர் அன்பு இயக்கியுள்ளார். டிரைக்டர்ஸ் சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கேப்டன் விஜயகாந்த்தை கொண்டுவந்துள்ளனர். விஜயகாந்த் வரும் காட்சிக்கு திரையரங்கில் மாபெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

தமிழகம் எங்கும் உள்ள 500 திரையரங்குகளில் வெளியான படை தலைவன் படம் முதல் நாளில் ரூ. 80 லட்சம் முதல் நாள் வசூல் செய்துள்ளது. அதனை தொடர்ந்து இப்படம் ஒரு வார முடிவில் ரூ.7 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. படம் குறைந்த பட்ஜெட்டில் உருவான நிலையில் இந்த வசூல் ஓரளவிற்கு படக் குழுவினருக்கு ஆறுதலைக் கொடுத்துள்ளது.

1 More update

Next Story