ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படம்: தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அப்டேட்

ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படம்: தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அப்டேட்
Published on

சென்னை,

கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை 'டான்' படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இதைத் தொடர்ந்து ரஜினி-கமல் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Also Read
தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி அனுமதி பெற வேண்டும் - ராமதாஸ்
ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படம்: தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அப்டேட்

இந்த நிலையில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிப்பதை தயாரிப்பு நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. அந்த போஸ்டரில் கார் மெக்கானிக் ஷெட் ஒன்றில் பழைய மாடல் கார் இருப்பது போன்று இடம்பெற்றுள்ளது. 1960-களில் நடக்கும் கதையாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். படத்தின் புரோமோ வீடியோ நாளை மறுநாள் (21-ந்தேதி) வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Also Read
இன்ஸ்டாகிராமில் பழக்கம்: காதலி பேசாததால் மனவேதனையில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு
ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படம்: தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அப்டேட்

இந்த போஸ்டரை இரவு 7.12 மணிக்கு தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. கமலின் பிறந்தநாளான 7 மற்றும் ரஜினியின் பிறந்தநாளான 12 என்பதை குறிக்கும் விதமாக 7.12 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் அடுத்த அறிவிப்பு நாளை மதியம் 12.07 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி தற்போது ஜெயிலர்-2 படத்தின் டப்பிங் பணிகளில் இருக்கிறார். இந்த பணிகள் முடிவடைந்ததும் மார்ச் மாதத்தில் இருந்து சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Also Read
ரூ.10 கோடியில் புனரமைக்கப்பட்ட தமிழ்நாடு ஆவணக்காப்பக கட்டடம் - உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படம்: தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அப்டேட்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com