ரஜினிகாந்தை பற்றி நடிகை ரித்திகா சிங் சொன்ன விஷயம் - வைரல்

ரஜினிகாந்த் குறித்து ரித்திகா சிங் சுவாரசியமான கருத்துகளை தெரிவித்துள்ளார்
சென்னை,
''இறுதிச்சுற்று'' படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் ரித்திகா சிங். மாதவன் நடிப்பில் வெளியான அந்த படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'வேட்டையன்' படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், ரஜினிகாந்த் குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது,
அவர் கூறுகையில், '' திரையுலகில் உள்ள சில நடிகர்களுடன் நடித்த தருணங்கள் எனது மனதில் எப்போதும் இருக்கும். அத்தகைய ஒரு நடிகர்தான் ரஜினிகாந்த். அவர் எவ்வளவு உயரத்தை அடைந்தாலும் மற்றவர்கள் மீது காட்டும் அன்பும் பாசமும் எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்தும்'' என்றார்.
Related Tags :
Next Story






