

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் ரோஷினி ஹரிப்ரியன். இதில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் 3 வது சீசனில் போட்டியாளராகக் கலந்து கொண்டார்.
சசிகுமார், சூரி நடிப்பில் வெளியான கருடன் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘தலைவன் தலைவி’ படத்தில் விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், ரோஷினிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இசையமைப்பாளர் சுந்தர மூர்த்தி கே.எஸை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
பொம்மை நாயகி, பெருசு, கையும் களவும், தண்டட்டி, பிகினிங், ஐரா உள்ளிட்ட திரைப்படங்களில் இசையமைப்பாளராக இவர் பணியாற்றியுள்ளார்.