சரத்குமாரின் “ஆழி” படத்தின் “அழகே உயிர் நீயடி” வீடியோ பாடல் வெளியீடு

சரத்குமார் நடித்துள்ள ‘ஆழி’ திரைப்படம் வருகிற 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சரத்குமாரின் “ஆழி” படத்தின் “அழகே உயிர் நீயடி” வீடியோ பாடல்  வெளியீடு
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சரத்குமார். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரவேற்பை பெற்ற இவர் ‘ஆழி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை இயக்குனர் மாதவ் ராமதாசன் இயக்கியுள்ளார். 888 புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரிக்கிறார்.

இந்தப் படத்திற்கு ஜாஸ்ஸி கிப்ட் இசையமைத்துள்ளார்.இதில் தேவிகா சதீஷ், இந்திரஜித் ஜெகன், தாமரை செல்வி, வையாபுரி மற்றும் ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. இந்த படம் கடலை மையமாக கொண்டு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் டீசர், டிரெய்லர் ரசிகர்களின் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்நிலையில், ‘ஆழி’ திரைப்படத்தின் ‘அழகே உயிர் நீயடி’ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல் நவின் கண்ணன் வரிகளில் ஜாஸ்ஸி கிப்ட் இசையில் பிரசன்னா பாடியுள்ளார். இத்திரைப்படம் வருகிற 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com