சரத்குமாரின் “ஆழி” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சரத்குமாரின் ‘ஆழி’ திரைப்படம் வருகிற 27-ந் தேதி வெளியாகிறது.
சரத்குமாரின் “ஆழி” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சரத்குமார். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரவேற்பை பெற்ற இவர் ‘ஆழி’ படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தினை இயக்குனர் மாதவ் ராமதாசன் இயக்கியுள்ளார். இந்த படம் கடலை மையமாக கொண்டு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. 888 புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் தேவிகா சதீஷ், இந்திரஜித் ஜெகன், தாமரை செல்வி, வையாபுரி மற்றும் ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்திற்கு ஜாஸ்ஸி கிப்ட் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், ‘ஆழி’ திரைப்படம் வருகிற 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com