"மோனிகா...": மேடையில் "வைப்"-ஆன சத்யராஜ்...வீடியோ வைரல்


Sathyaraj Electrifying Dance Performance to Monica Song
x
தினத்தந்தி 5 Aug 2025 2:45 PM IST (Updated: 5 Aug 2025 2:45 PM IST)
t-max-icont-min-icon

''மோனிகா'' பாடலுக்கு நடிகர் சத்யராஜ் நடனமாடி அசத்தி இருக்கிறார்.

ஐதராபாத்,

ஐதராபாத்தில் நடந்த ''கூலி'' திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்வில் கலந்துகொண்ட சத்யராஜ் ''மோனிகா'' பாடலுக்கு நடனமாடி அசத்தினார்.

நடிகர் ரஜினிகாந்த் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூலி'. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தில் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடந்தது. இதில் மோனிகா பாடலுக்கு நடிகர் சத்யராஜ் மேடையில் வைப் ஆனார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story