’24 மணி நேரமும்...அதற்கு நான் விரும்பவில்லை’ - நடிகை சோபிதா

நடிகை சோபிதா தனது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சுவாரசியமான கருத்துகளைத் தெரிவித்தார்.

’24 மணி நேரமும்...அதற்கு நான் விரும்பவில்லை’ - நடிகை சோபிதா
Published on

சென்னை,

பிரபல தெலுங்கு நடிகை சோபிதா துலிபாலா. சமீபத்தில் நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்துகொண்ட இவர் ஊடக கவனத்திலிருந்து தன்னை தூரமாக வைத்துக் கொண்டுள்ளார்.

திருமணத்துக்குப்பின்பு “சீகடிலோ” என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். தமிழில் பா.ரஞ்சித் இயக்கும் வெட்டுவம் படத்திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

Also Read
ஆதியின் “மரகத நாணயம் 2” படப்பிடிப்பு துவக்கம்

’24 மணி நேரமும்...அதற்கு நான் விரும்பவில்லை’ - நடிகை சோபிதா

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் சோபிதா, தனது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சுவாரசியமான கருத்து்களைத் தெரிவித்தார். எப்போதும் செய்திகளில் இடம்பெறவோ அல்லது கவனத்தை ஈர்க்கவோ தனக்கு விருப்பமில்லை என்றும் எல்லோரும் தன்னைப் பற்றி 24 மணி நேரமும் பேசுவதை தான் விரும்பவில்லை என்றும் கூறினார்.

தனக்கு என்ன வேண்டும், என்ன வேண்டாம் என்பதில் தான் தெளிவாக இருப்பதாகவும், தனக்கென ஒரு தனித்துவமான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் ஷோபிதா கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com