

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்த துரந்தர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகளவில் வசூல் சாதனை படைத்துள்ளது. தெய்வ திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாரா அர்ஜுன், இதில் ரன்வீர் சிங்கின் ஜோடியாக நடித்துள்ளார். மாதவன், சஞ்சய் தத், அக்சய் கன்னா, அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாகிஸ்தானில் நடைபெற்ற ஆபரேஷன் லியாரி மற்றும் இந்திய உளவுத்துறை அமைப்பு ரா மேற்கொண்ட ரகசிய நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த ஸ்பை திரில்லர், 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டாலும், உலகம் முழுவதும் ரூ.1300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. திரையரங்குகளில் பெற்ற வரவேற்பை தொடர்ந்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகும் கவனத்தை ஈர்த்தது.
இதன் வெற்றியைத் தொடர்ந்து, துரந்தர் தி ரிவெஞ்ச் என்ற தலைப்பில் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக படக்குழுவினர் கூறியிருந்தனர். இந்த நிலையில், தற்போது, துரந்தர் தி ரிவெஞ்ச் படத்தின் டீசரை தயாரிப்பு நிறுவனமான ஜியோ ஸ்டியோஸ் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த படம் வருகிற மார்ச் மாதம் 19ந் தேதி உலக அளவில் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.