

இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள திரைப்படம் ‘கா’. இந்த படத்தில் ஆண்ட்ரியா, காட்டுக்குள் சென்று பறவைகள் மற்றும் விலங்குகளைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக் கலைஞராக, ஆக்சன் நிறைந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சலீம் கவுஸ், மாரிமுத்து, கமலேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் சுந்தர் சி. பாபு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நடுக்காட்டுப் பகுதிகளில் சுமார் 40 நாட்கள் நடைபெற்றுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டிலேயே இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, வெளியீட்டுக்கு தயாராக இருந்தது. எனினும் சில காரணங்களால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது, இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், இந்த மாதத்திற்குள் படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.